எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

புதன், 13 ஜனவரி, 2021

இரணிக்கோவில் நூற்றியெட்டு அம்மன்களும் குபேரனும்.

இரணிக்கோவில் நூற்றியெட்டு அம்மன்களும் குபேரனும்.


இரணிக்கோவில் பற்றிப் பல்வேறு இடுகைகளில் பகிர்ந்துள்ளேன்.ஆட்கொண்டநாதர், சிவபுரந்தேவியோடு நரசிம்மேஸ்வரரும் குடி கொண்ட கோவில் இது.

 பிரகாரத்தில் தட்சிணாமூர்த்தியும், அருணாச்சலேஸ்வரரும். சனகாதி முனிவர்கள் சூழ தட்சிணாமூர்த்தி.

மேலே அன்னமும் கீழே வராகமும் தேட ஜோதிஸ்வரூபமாய்  அடிமுடியறியவொண்ணா அண்ணாமலையார்.

சிற்பங்களுக்குப் புகழ்பெற்ற கோவில் இது. இங்கே பைரவர் சந்நிதியும் , சிவபுரந்தேவி சந்நிதியும் 108 மூர்த்தங்களால் செதுக்கப்பட்டுள்ளது.

108 பைரவமூர்த்தி சிற்பங்களை பைரவர் கருவறைப் பிரகாரச் சுவரில் தரிசிக்கலாம்.

அதேபோல் 108 அம்மன் திருமூர்த்தங்களை அம்மன் கருவறைப் பிரகாரச் சுவரில் தரிசிக்கலாம்.
 தனிச்சந்நிதியில் எழிலான கஜ/மஹாலெக்ஷ்மி.


இக்கோவில் எவ்வளவு பிரம்மாண்டம் என்பதற்கு இந்த கோமுகியே சாட்சி.

ஒரு காசாணி அண்டாவை வைக்குமளவுக்கு நீளமும் அகலமும் கொண்டது.


கிரானைட் கல் தாமரைகளின் எழில் மனதை மயக்கும். அடுக்கடுக்கான சிற்பவேலைப்பாடு.
 கருவறைச் சுவரில் தாமரைத் தூண்கள்.


அம்மன் சந்நிதிக்குக் காவலாக ஜெயை விஜயை.

அம்மன் சந்நிதியின் பக்கவாட்டுச் சுவர்களின் அம்மனின் கண்கவர் திருக்கோலங்கள்.

சாந்தரூபியிலிருந்து உக்ரரூபிணி வரை. அதோடுஆக்ரோஷச் சிம்மங்களும் இங்கே ஸ்பெஷல்.

அருள்மிகு பைரவர் தங்கக் கவசத்தில்.


அம்மன் சந்நிதிச் சுற்றில் சிவமந்திரம்.

பிரம்மன்.. சூரியபகவான் இல்லையென நினைக்கிறேன். சூரியன் எனில் ஏழு புரவிகள் வேண்டுமே.

இங்கே குபேர வழிபாடு பிரசித்தம். குபேரனுக்கு ஹோமம் வளர்த்துப் பச்சைக் குங்குமம் பிரசாதமாக அளிக்கிறார்கள்.

பக்கம் பக்கமாய் ஊர்த்துவதாண்டவர், மகிஷாசுரமர்த்தினி

குதிரையில் ஆரோகணிக்கும் குபேரனின் அருள்பொலியும் தோற்றம். ஆட்கொண்டநாதரை குபேரன் இத்தலத்தில் வந்து வணங்கி அருள் பெற்றதாக ஐதீகம்.

மதுரை வீரன்.

குபேரன் சந்நிதியில் ஸ்பெஷல் விளக்கு.


அண்ணன் நரசிம்மேஸ்வரர் ஆச்சே அதனால் சிம்மங்கள் சூழ அன்னை சிவபுரந்தேவி.

எத்தனை திருக்கோலங்களில் அம்மன் அருள்பாலிக்கிறாள்.


நாயகி நான்முகி நாராயணி கை நளின பஞ்ச
சாயகி சாம்பவி சங்கரி சாமளை சாதி நச்சு
வாயகி மாலினி வாராகி சூலினி மாதங்கி என்று
ஆயகியாதி உடையாள் சரணம் அரண் நமக்கே


வாருங்கள் யாவரும் குபேரனையும் அன்னையையும் வணங்கி அருள் பெறுவோம்.

டிஸ்கி:- இவற்றையும் பாருங்க.

1. அஷ்ட பைரவர்களும் 108 உக்கிர பைரவர்களும்.

2. துர்க்கை உள்ளே லெக்ஷ்மி வெளியே.

3. இராசிகளை ஆளும் இரணியூர் நீலமேகப் பெருமாளும் கனகவல்லித் தாயாரும். 

4. ஊருணிகள் - திருக்கோயில் புஷ்கரணிகளும் தாமரை பூத்த தடாகங்களும்.

5. இரணிக்கோயில் கோபுரங்களும் திருச்சுற்று மதிலில் பள்ளிகொண்டபெருமாளும் நான்முகனும். 

6. இரணிக்கோயில் படிச்சிற்பங்கள்.

7. இரணிக்கோயில் தூண்சிற்பத் திருமூர்த்தங்கள்

8. விருத்தன் திருமணமும் விடையேறு பாகன் திருவிளையாடல்களும். 

9. காமதேனுவும் கீதோபதேசமும் பட்டாபிஷேகமும்.

10. இரணியூரில் குபேர ஹோமமும் பச்சைக் குங்குமமும்.

11. இரணியூர் ஆட்கொண்டநாதர் சிவபுரந்தேவியம்மன் கோவில்.

12. வயலினும் வீணையும் மீட்டும் கோபிகைகள்.





1 கருத்து:

  1. Thenammai Lakshmanan24 ஜூன், 2020 ’அன்று’ பிற்பகல் 12:27
    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

விநாயகர் சதுர்த்திக் கோலங்கள்.

விநாயகர் சதுர்த்திக் கோலங்கள்.