எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

ஞாயிறு, 17 ஜனவரி, 2021

இரணிக்கோவிலின் சிற்பக்கூட்டம்.

இரணிக்கோவிலின் சிற்பக்கூட்டம்.

இரணிக்கோவிலைப் பற்றிப் பல்வேறு தருணங்களிலும் எழுதியாயிற்று. 1500 ஆண்டுகளுக்கு முற்பட்ட கோவில் இது. இங்கே இருக்கும் காளி, பெருமாள் கோவில், ஆட்கொண்ட நரசிம்மர், அஷ்டலெக்ஷ்மி மண்டபம், நவ துர்க்கைகள், தூண் சிற்பங்கள், குபேரர், விதான வண்ண ஓவியங்கள்  என.

இங்கே இருக்கும் பைரவருக்கு ஷண்பக சூர சஷ்டி சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. மேலும் மூன்று கல் தூண்கள் நிறுவப்பட்டு மழை நீர் சேகரிப்பும் அந்தக் காலத்திலேயே செய்யப்பட்டுள்ளது.

இன்னும் ராட்டையும் தேசியக் கொடியும் காந்தி அடிகளுமே விதானச் சிற்பமாக இருந்த அதிசயத்தையும் பார்த்தோம்.

இனி தூண்களிலும் பக்கச் சுவர்களிலும் இருக்கும் எழிலார்ந்த சிற்பத்தொகுதிகளைப் பார்ப்போம்.

கம்பீரமான ஐந்துநிலை ராஜகோபுரம் இக்கோவிலின் எழிலுக்கு முதல் சாட்சி. முன்னே இருப்பது அஷ்டலெக்ஷ்மி மண்டபம்.

கருவறையில் அபிஷேகம், அலங்காரம், ஆட்கொண்ட நாதருக்கு.


பிரகாரத்தின் உள்பக்கப் பக்கச் சுவர்களில் நிருதி/நைருதி மூர்த்தி.

மன்மதன் ரதி.
விடைப்பாகர்.
கோவிலுக்கு வெளியே உள்ள அதிஷ்டானம்.

விடை சூழ் மதில்.

அன்னபட்சி, பெரிய திருவடி கருடாழ்வார்.

சங்கு.

சுப்ரமணியர், மாணிக்க வாசகர், இந்திரன், முப்புரம் எரித்தவர்.

திருவேங்கடமுடையான், அக்னி மூர்த்தி, துர்வாசர், கூத்தாடும் விநாயகர்.

எமதர்மர், வைரவர், எண்கரக்காளி, மாதொரு பாகியர்.


தக்ஷிணாமூர்த்தி.

இந்திரன், முப்புரம் எரித்தவர், வீரபத்திரன், ஈசான மூர்த்தி, கௌரி அம்மன், அகோர மூர்த்தி பிரம்மன்.

அம்மன் , சுவாமி சந்நிதி எதிரே இந்தக் கிளிகள். இவை புடைப்புச் சிற்பமா இல்ல பள்ளமாக உள்ளதா.. இந்தக் கண்கட்டு வித்தையைப் பற்றிக் கூறுங்கள்.


இரு சந்நிதிகளுக்கும் எதிரே உள்ள தாமரை பீடமும் கோலமும்.

அழகான நந்தி.

சிவன் சந்நிதிக்குப் பக்கவாட்டில் ( இடதுபுறம்,) பைரவர், அம்மன் கருவறைக்குப்பின்புறம் உள்ள விதானத்தில் இந்த இராட்டைச் சிற்பம் உள்ளது. ஒரு ஆண் பக்கத்தில் நிற்க பெண் இராட்டையைச் சுற்றி நூலை நூற்றுக் கொண்டிருக்கிறார்.

கோவிலின் வெளிப்புற எழிற் தோற்றம்.

சிவன் குடும்பம்.


தென்னாடுடைய சிவனே போற்றி.
என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி.

திருச்சிற்றம்பலம்.

டிஸ்கி:- இவற்றையும் பாருங்க.

1. அஷ்ட பைரவர்களும் 108 உக்கிர பைரவர்களும்.

2. துர்க்கை உள்ளே லெக்ஷ்மி வெளியே.

3. இராசிகளை ஆளும் இரணியூர் நீலமேகப் பெருமாளும் கனகவல்லித் தாயாரும். 

4. ஊருணிகள் - திருக்கோயில் புஷ்கரணிகளும் தாமரை பூத்த தடாகங்களும்.

5. இரணிக்கோயில் கோபுரங்களும் திருச்சுற்று மதிலில் பள்ளிகொண்டபெருமாளும் நான்முகனும். 

6. இரணிக்கோயில் படிச்சிற்பங்கள்.

7. இரணிக்கோயில் தூண்சிற்பத் திருமூர்த்தங்கள்

8. விருத்தன் திருமணமும் விடையேறு பாகன் திருவிளையாடல்களும். 

9. காமதேனுவும் கீதோபதேசமும் பட்டாபிஷேகமும்.

10. இரணியூரில் குபேர ஹோமமும் பச்சைக் குங்குமமும்.

11. இரணியூர் ஆட்கொண்டநாதர் சிவபுரந்தேவியம்மன் கோவில்.

12. வயலினும் வீணையும் மீட்டும் கோபிகைகள்.




1 கருத்து:

  1. திண்டுக்கல் தனபாலன்22 ஜூன், 2020 ’அன்று’ முற்பகல் 11:05
    அழகான சிற்பங்கள்...

    பதிலளிநீக்கு

    Thulasidharan V Thillaiakathu23 ஜூன், 2020 ’அன்று’ முற்பகல் 11:37
    கோயில் சிற்பங்கள் படங்கள் எல்லாம் அழகு. கலைநயம் மிக்க கோயில்! தகவல்களும் சிறப்பு

    துளசிதரன்

    கீதா

    பதிலளிநீக்கு

    Thenammai Lakshmanan24 ஜூன், 2020 ’அன்று’ பிற்பகல் 12:57
    நன்றி டிடி சகோ

    நன்றி துளசி சகோ & கீத்ஸ்

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

விநாயகர் சதுர்த்திக் கோலங்கள்.

விநாயகர் சதுர்த்திக் கோலங்கள்.