எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

செவ்வாய், 12 ஜனவரி, 2021

ஊனையூர் முத்துவெள்ளைச் சாத்தையனார் கோவில்.

ஊனையூர் முத்துவெள்ளைச் சாத்தையனார் கோவில்.

ஊனையூர் கானாடுகாத்தானிலிருந்து திருமயம் செல்லும் வழியில் இருக்கிறது. இங்கே முத்து வெள்ளைச் சாத்தையனார் கோயில் கொண்டிருக்கிறார்.
வேளார். புதிதாய் செய்து கொடுத்த தீபாராதனை, மணி, விபூதி மடலுடன்.

வேண்டுதல் தொட்டில். வீட்டில் தொட்டிலாடவும் வம்சம் தழைக்கவும் இத்தொட்டில் கட்டி விடப்படுகிறது.



ஊனையூர் கருப்பர், பண்டாரத்தையா, சோணையன், பண்ணி வீரப்பர், செட்டிச்சி அம்மன், முன்னோடி, விநாயகர், சுப்ரமண்யர், பைரவர் ஆகியோர் கோயில் கொண்டு அருள் பாலிக்கிறார்கள்.



புது விளைச்சலை இங்கே தெரியும் உயர்ந்த தளத்தில் கொட்டி வைப்பார்கள். கோவிலுக்கு அர்பணிப்பார்கள். நெல் அளக்கும் இடம் என்று சொல்வார்கள்.

தோட்டம் & வயல் எதானாலும் புது விளைச்சலை இங்கே கொண்டு வந்து கொட்டிக் கோவிலுக்குக் கொடுக்கிறார்கள்.



சிவன்ராத்திரி பிரசித்தம். உறவினர்கள் ஒன்று கூடி மாட்டு வண்டி கட்டிக்கொண்டு வந்து இரவு தங்கி அபிஷேகம், அலங்காரம் பூசை செய்து வடித்து  உண்பார்கள்.





சாதாரண நாட்களிலும் திருமணம், பிறந்தநாள், தீபாவளி, சிவன்ராத்திரி, குடிபுகுதல் போன்ற பண்டிகைகள், திருவிழாக்களின் போது சென்று எல்லா திரவியங்களாலும் அபிஷேகம் செய்து, வஸ்திரம் பூமாலை சார்த்தி அபிஷேகம் செய்து தளிகை படைத்து வணங்குவது வழக்கம். சிலர் சுருட்டு சாராயமும் படைப்பார்கள்.



செட்டிச்சி அம்மன்.

சப்த கன்னியர்.


கோவிலைக் கட்டிய நகரத்தார்.


பலிபீடம். இங்கே யானை இருக்கிறது.

முத்து வெள்ளை சாத்தையனாரின் வாகனம் யானை.

சிவன்ராத்திரிக்கு வண்டி கட்டி வடித்துண்க வருவோர் தூங்காமல் விடிய விடிய விழிக்க இந்த ஆடுபுலி ஆட்டத்தை விளையாடுவார்களாம்.




கம்மாயினுள் அமைந்திருப்பதுதான் சோணையன் கோயில். இவருக்குப் பொரி கடலை வெல்லம் படைத்து இளநீர் கண் திறந்து வைத்து சிதர்காய் செலுத்தி வருவது வழக்கம்.


வாயிலில் உயர்ந்து நிற்கும் மாபெரும் புரவி பேரழகு.

முதல் விளைச்சலை இங்கே கொண்டு வந்து படியளந்து கோயிலுக்கு சுற்றுவட்டார கிராமமக்கள் அளிப்பார்கள்.

கிடாவெட்டும் அவ்வப்போது நடைபெறும். கோழியும் சமைத்துப் படைப்பார்கள்.

கோயிலின் இடப்புறம் ஒரு அழகான தாமரைத் தடாகம் காட்சி அளிக்கும். உள்ளே வாடாமல்லி தோட்டமெங்கும் நிரம்பிப் பூத்துக் கிடக்கும்.

கோயிலின் எதிரே ஒரு பரந்து விரிந்த கண்மாய் காட்சி அளிக்கும். இங்கே விடுமுறை நாட்களில் குழந்தைகள் குளித்துக் கும்மாளமிடுவார்கள். ஒருபுறம் கரை உயர்ந்து ஆலமரங்கள் வரிசையாக நின்று கவினுறக் காட்சி அளிக்கும்.

காரைக்குடியில் இருந்து திருமயம் செல்லும் வழியில் நேமத்தான் பட்டி தாண்டி இருக்கிறது ஊனையூர். மொத்தத்தில் மூன்று மாதங்களுக்கு ஒருமுறையேனும் சென்று கடவுளர்களின் அருளைப் பெற்று ஆராதனை செய்து அகமகிழ்ந்து வருவோம்.

1 கருத்து:

  1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

விநாயகர் சதுர்த்திக் கோலங்கள்.

விநாயகர் சதுர்த்திக் கோலங்கள்.