எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

புதன், 6 ஜனவரி, 2021

மைசூரு சாமுண்டீஸ்வரி அம்மன் கோவில்

மைசூரு சாமுண்டீஸ்வரி அம்மன் கோவில்

















மைசூரு சாமுண்டீஸ்வரி அம்மன் கோவில்

மைசூருக்குச் சென்றால் சாமுண்டியைத் தரிசிக்காமல் அந்தப் பயணம் நிறைவு பெறுமா என்ன.

பெங்களூருவில் இருந்து மைசூருக்குச் சென்றவுடன் ( ஒரு நாள் சிட்டி டூர் ) அங்கே காலையில் செயிண்ட் ஃபிலோமினா சர்ச், அரண்மனை ( புடவைக் கடைகள் ) பார்த்தபின் சாமுண்டி கோவிலுக்கும் அதன் பின் பிருந்தாவனுக்கும் வந்தோம். 

கடலில் இருந்து சுமார் 3,486 அடி உயரத்தில் அமைந்துள்ளது இக்கோவில்.

அது ஒரு மழைக்காலம். எனவே இங்கே பிரம்மாண்டமாகக் காட்சி தந்த நந்தி சிலையை ( பஸ்ஸிலிருந்து )  படம் எடுக்க முடியவில்லை. கோயிலில் அம்மனின் தரிசனம் அற்புதப் பெருங்காட்சி. இந்த ஊரே மஹிஷாசூர, மகிஷா மண்டலம் என்ற பேரில் இருந்ததாம்.  அதனால்தான் மைசூரு. மஹிஷனின் ஊரு மஹிசூரு, மைசூரு.

முன்னொரு காலத்தில் மஹிஷாசூரன் என்ற அரக்கன் இருந்தான். அவன் ஆண்கள், தண்ணீர், பிராணிகள் இவற்றால் தனக்கு அழிவு வரக்கூடாது என்று சிவபெருமானை வேண்டி தவமிருந்தான்.

சிவன் தான் மனமிரங்கி வரத்தை எல்லாம் வாரி  வாரி வழங்கிடுவாரே. அதனால் வரம் பெற்றபின் மஹிஷாசூரனின் அட்டகாசம் அதிகமாயிற்று. அதை யாராலும் அடக்க முடியவில்லை, சிவனாலும் கூட.

எனவே மக்கள் அவரிடம் முறையிட அவரோ எதால் அழிவில்லாவிட்டாலும் பெண்ணால் அவனுக்கு அழிவு உண்டு. நல்ல வேளை அந்த வரத்தை நான் அவனுக்கு அருளவில்லை. அதனால் தேவியைக் குறித்துப் பூஜை செய்து அவனிடமிருந்து காக்கும்படிக் கேளுங்கள். என்று சொன்னார்.

உடனே பெண்கள் பார்வதி தேவிக்குப் பூஜை செய்து தம்மைக் காக்கும்படி வேண்டினர். பிரம்மா, விஷ்ணு, மகேஸ்வரன் ஆகிய மும்மூர்த்திகளிடம் வரம் பெற்றுத் தேவி ஆடி மாதம் மூன்றாம் வெள்ளிக்கிழமை இங்கே பிறந்தாள்.

பதினெட்டுக் கைகளுடன் பல்வேறு ஆயுதங்கள் கொண்டு அசுரனை வாட்டி வதைத்தாள். அந்தப் பிரியத்தின் காரணமாக மக்கள் அவளுக்குச் சிலை எழுப்பிக் கோயில் கட்டி அங்கேயே உறையும்படி வேண்டிக் கொண்டார்கள். மக்களின் கோரிக்கையை ஏற்று அவளும் அங்கேயே உறைகின்றாள். எனவே பிரதி வருடம் ஆடி வெள்ளி இங்கே விசேஷம்.

ஹோய்சாள மன்னர்கள் 12 ஆம் நூற்றாண்டில் இக்கோயிலைக் கட்டினர். உடையார் மன்னர்களால் பதினெட்டாம் நூற்றாண்டில் புனருத்தாரணம் செய்யப்பட்டது இக்கோவில்.

ஏழு நிலை இராஜ கோபுரம் கொண்ட இக்கோயில் தமிழ் நாட்டு முறைப்படிக் கட்டப்பட்டது. இதன் கோபுர கலசங்கள் தங்கத்தால் அமைக்கப்பட்டவை. இம்மலைக்குச் செல்ல ஆயிரம் படிகள் உள்ளன. பஸ்ஸில் சென்றதால் சீக்கிரம் போய்விட்டோம். இங்கே 800  வது படியின் அருகில்தான் அந்த நந்தி சிலை இருக்கிறதாம்.

இது 18 சக்தி பீடங்களில் ஒன்று. மைசூரிலிருந்து 13 கிலோமீட்டர் தொலைவில் இருக்கு. நல்ல கூட்டம். தீமையை அழித்து நன்மையை நிலை நிறுத்திய அம்பாளின் மாபெரும் சக்தி விகசிக்கிறது எங்கெங்கும். மொத்தத்தில் நமது எனர்ஜியை ரீசார்ஜ் செய்து கொண்டு வந்தோம்.



டிஸ்கி:- இவற்றையும் பெங்களூருவில் பாருங்க.

1.  மலர்க் கண்காட்சியும் போன்சாய் மரமும், சில்க் காட்டன் மரமும், கல் மரமும் லால் பாகில்.

2.குடியரசு தினத்தில் லால் பாகில் காய் கனி அணிவகுப்பு. ( 2014)
.
3. லால்பாகில் கோடையைத் தணிக்கும் கீரைகள். 

4. நான் தன்னந்தனிக்காட்டு ராஜா. பாகம் 1 

5. இன்னும் சில ஒற்றையர்கள். பாகம் 2

6. மஞ்சள் முகமே வருக. (LAL BAGH )

7. குடியரசு/சுதந்திர தினத்தில் லால்பாக்.

8. இன்னும் சில ஒற்றையர்கள் பாகம் 3

9.  காதல் ரோஜாவே. -- பாகம் 4 

10. காதல் ரோஜாவே..-- பாகம் 5

11. கோடையைக் குளுமையாக்கும் ஒரு கூடைப் பூக்கள்.

12. கழிவுநீரிலும் உயிர்க்கும் கல்வாழைகள்.

13. பிருந்தாவனத்தில் இசை நீரூற்றின் வண்ண நடனம். மைசூரில் வண்ணமயமான கோடை. 

14. பணம் கொழிக்கும் பனசங்கரி – சாகம்பரி. 

15. என் தோட்டத்தில் எத்தனை ரோஜா. இருவர்

16.கொள்ளை லாபம் தரும் கோழிக்கொண்டைப்பூ

17. நான்கு வாயில்கள். லால் பாக். 

18. சந்தனம் பூசும் மஞ்சள் நிலாக்கள்.

19. மனித உருவிலும் பசுமைச் சிற்பங்கள். 

20. மலர்கள் நனைந்தன பனியாலே. 

21. நீர்த்துளியா தேன்துளியா..

22. தேன் உண்ணும் வண்டு.. மாமலரைக் கண்டு. 

23. பெண்ணல்ல பெண்ணல்ல பிங்க்கிப் பூ.. :)

24. லால் பாக் . தும்பிக்கைகளா பூமியின் நம்பிக்கைகளா.  

25.  லால் பாக். அழகு ஆர்க்கிட்ஸ்

26.  லால் பாக். பச்சை நிறமே பச்சை நிறமே .

27. லால் பாக் . என்னைக் கவர்ந்த சில இடங்கள்.

28. லால் பாக். பசுமை வளைவுகள்.

29. அழகழகாப் பூத்திருக்கு. ! 

30. மொக்கும் மலரும்.

31. இலை அலையும் ரோஜாப் படகும் பூ(மி)ப் பந்தும்.

32. மறைந்திருந்தே பார்க்கும் மர்மமென்ன. மூவர் அணி.

33. ஸ்ரீ முகுந்தம்மா தேவி கோவில்.

34. வெற்றிலை பூமாலையும் வெல்ல நெய்விளக்கும்.

35.. பனஸ்வாடியில் ஐந்து கோவில்கள்.

36. துறவின் வயலட். பான்ஸியும் பெட்டுனியாவும்.

37. மைசூரு சாமுண்டீஸ்வரி அம்மன் கோவில்

38. ஸ்ரீரங்கப்பட்டினா ஸ்ரீரங்கநாதஸ்வாமி கோயில்

1 கருத்து:

  1. வெங்கட் நாகராஜ்11 ஜனவரி, 2020 ’அன்று’ பிற்பகல் 1:10
    சிறப்பான தகவல்களுடன் நல்லதொரு பகிர்வு.

    சிறு வயதில் மைசூர் சென்றது. நினைவு தெரிந்து வாய்ப்பு அமையவில்லை! :)

    பதிலளி

    Thenammai Lakshmanan18 ஜனவரி, 2020 ’அன்று’ முற்பகல் 12:10
    நன்றி வெங்கட் சகோ

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளி

    Unknown19 ஜனவரி, 2020 ’அன்று’ பிற்பகல் 1:20
    அருமை

    பதிலளிநீக்கு

யூ ட்யூபில் 3041 - 3050 வீடியோக்கள். கடவுள் வாழ்த்து. தினம் ஒரு திருக்குறள்.

 யூ ட்யூபில் 3041 - 3050 வீடியோக்கள். கடவுள் வாழ்த்து. தினம் ஒரு திருக்குறள். 3041.தினம் ஒரு திருக்குறள் - 1 l திருவள்ளுவர் l  தேனம்மைலெக்ஷ்...