வெற்றிலை பூமாலையும் வெல்ல நெய்விளக்கும்.
வெற்றிலை பூமாலையும் வெல்ல நெய்விளக்கும்
அனுமன் ஜெயந்தி அன்று ஆஞ்சநேயர் கண்களில் நீர் துளிர்த்திருப்பதைக் காண வேண்டுமா. நீங்கள் பெங்களூரு பனஸ்வாடிக்குத்தான் வரவேண்டும். மெஜஸ்டிக்கிலிருந்து கிட்டத்தட்டப் பதிமூன்று கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது பனஸ்வாடி ஆஞ்சநேயர் கோவில். நான் ஆஞ்சநேய ஜெயந்தி அன்று பெங்களூருவில் இல்லை. அதனால் பார்க்கும் வாய்ப்புக் கிட்டவில்லை.
இந்தக் கோவிலில் நிறைய விசேஷங்கள். வெற்றிலை மாலை பாக்கு வைத்துப் பட்டியாகக் கட்டப்படாமல் பூ வைத்து மாலையாகவே கோர்க்கப்பட்டு இருப்பது. முரட்டு உள்ளங்கை போல அகலமான நீளமான வெற்றிலையில் சாமந்திப் பூக்களைக் கோர்த்து மாலை செய்திருக்கிறார்கள். அதை அணிந்து கொண்டு ஜோராகக் காட்சி அளிக்கிறார் அனுமன்.
இரண்டாவது இது நம்மூர்
பாணியில் கோபுரம் வைத்துக் கட்டப்பட்ட கோவில் . கருவறைக் கோபுரங்களும் மூன்றுநிலை
மாட இராஜகோபுரமும் வெகு அழகு.
மூன்றாவது கொஞ்சம் கூட அயராமல் தளராமல் அண்டா அண்டாவாகப் பிரசாதம் கொடுத்துக் கொண்டே இருக்கிறார்கள். அடுத்தடுத்து நான்கு கோவில்கள் சென்று வந்தால் மதிய சாப்பாடு முடிந்துவிடும்.
நூறாண்டுகளுக்கு முற்பட்டதாம் இக்கோவில். கோவில் எதிரேதான் வண்டிகள் நிறுத்த அதிக இடமில்லாமல் ஒரே நெருக்கடி. அதுவும் சனிக்கிழமைகளில் வெகு கூட்டம்.
உள்ளே அரசமரமும் இருக்கின்றது. அதோடு இராமர் சீதை இலக்குவன், சிவன், முருகன் , விநாயகர் ஆகியோருக்கும் தனித்தனிச் சந்நிதிகள். எல்லாருக்கும் வெள்ளிக் கவசங்கள்.
சிவன் சந்நிதியின் பிரகாரத்தில் காலபைரவர், தக்ஷிணாமூர்த்தி, துர்க்கை இடம்
பெற்றுள்ளது வித்யாசம்.
அஷ்ட ஐஸ்வர்யம் பொலியும் மகாலெக்ஷ்மி கொள்ளை அழகு. அவள் எதிரேயே மஞ்சளும்
குங்குமமும் துளசியும் கொட்டிக் கிடக்கின்றன. வேண்டியதை எடுத்துக் கொள்ளலாம்.
ஆஞ்சநேயர் சந்நிதிக்கு
எதிரே கொடிமரத்தூண். பிரம்மாண்ட ஆஞ்சநேயருக்கு லேயர் லேயராக துளசி சாமந்தி
மாலைகளுடன் வடை மாலைகளும் வெண்ணைக் காப்பும் மிக கம்பீரம்.
கைகளைக் குவித்தால் காத்தளிக்கப்படுவோமென பணிவைக் கற்பிக்கிறார் ஆஞ்சநேயர்.
துளசியும் சாமந்தியும் கொடுத்துக் குடும்பத்தில் அனைவர் பெயரிலும் அர்ச்சனை
செய்தோம்.
கருவறைக் கோபுரம். அனுமத் ஜெயந்தியிலும் சனிக்கிழமைகளிலும் கூட்டம் எக்கித் தள்ளுகிறது. இவர் சாலிக்கிராமம் என்ற ( உடுப்பி அருகே உள்ள ஊர் ) ஊரில் ஒரே கல்லில் செதுக்கப்பட்ட அனுமனாம்.
இக்கோவிலின் பிரகாரத்தில் வித்யாசமான அகல்விளக்குகளோடு வெல்லத்தைச் சீய்த்துக்
குழி செய்து நெய் விட்டு அதிலும் திரிப் போட்டுத் தீபம் ஏற்றிக் கொண்டிருந்தார்கள்
மக்கள்.
மாவிளக்குப் போல வெல்ல நெய்விளக்கு. ! கூடிக் கூடி எரிந்து கொண்டிருந்தன தீபங்கள்.
நாம் ஆஞ்சநேயரிடமும் ராமரிடமும் அன்பு, பொறுமை, பணிவு, தெளிவு, தீர்க்கம், மனைநலன், மக்கள் நலன், நன்மனம், நல்வாழ்வு, ஆயுள், ஆரோக்கியம், செல்வம் தொடர்ந்து சித்திக்கப் பிரார்த்தித்து விடைபெற்றோம்.
எலுமிச்சைச் சாதம்
பிரசாதம் வாங்கி அங்கேயே உள்ள பெஞ்சுகளில் அமர்ந்தும் உண்ணலாம். வெளியே வந்தால்
இப்படி மாலைகள் வண்ணம் காட்டின. மயங்கிப் போய் புகைப்படம் எடுத்துக்
கொண்டேன். மனதுக்குள் வெற்றிலை அனுமனாயும் அந்தப் பூக்கள் ராம லெக்ஷ்மண
சீதையாகவும் பரிணமித்தனர் என்றால் மிகையில்லை.
“ராம ஹரே ராமா
ராம ராம ஹரே ஹரே
கிருஷ்ண ஹரே கிருஷ்ணா
கிருஷ்ண கிருஷ்ணா ஹரே ஹரே “
டிஸ்கி :- இக்கோவிலின் அமைவிடம்
ஸ்ரீ ஆஞ்சநேய ஸ்வாமி கோவில்,
ஆஞ்சநேயா கோவில் தெரு,
லெக்ஷ்மம்மா லே அவுட்,
பனஸ்வாடி,
பெங்களூரு,
கர்நாடகா - 560043,
இந்தியா.
டிஸ்கி:- இவற்றையும் பெங்களூருவில் பாருங்க.
1. மலர்க் கண்காட்சியும் போன்சாய் மரமும், சில்க் காட்டன் மரமும், கல் மரமும் லால் பாகில்.
2.குடியரசு தினத்தில் லால் பாகில் காய் கனி அணிவகுப்பு. ( 2014)
.
3. லால்பாகில் கோடையைத் தணிக்கும் கீரைகள்.
4. நான் தன்னந்தனிக்காட்டு ராஜா. பாகம் 1
5. இன்னும் சில ஒற்றையர்கள். பாகம் 2
6. மஞ்சள் முகமே வருக. (LAL BAGH )
7. குடியரசு/சுதந்திர தினத்தில் லால்பாக்.
8. இன்னும் சில ஒற்றையர்கள் பாகம் 3
9. காதல் ரோஜாவே. -- பாகம் 4
10. காதல் ரோஜாவே..-- பாகம் 5
11. கோடையைக் குளுமையாக்கும் ஒரு கூடைப் பூக்கள்.
12. கழிவுநீரிலும் உயிர்க்கும் கல்வாழைகள்.
13. பிருந்தாவனத்தில் இசை நீரூற்றின் வண்ண நடனம். மைசூரில் வண்ணமயமான கோடை.
14. பணம் கொழிக்கும் பனசங்கரி – சாகம்பரி.
15. என் தோட்டத்தில் எத்தனை ரோஜா. இருவர்
16.கொள்ளை லாபம் தரும் கோழிக்கொண்டைப்பூ
17. நான்கு வாயில்கள். லால் பாக்.
18. சந்தனம் பூசும் மஞ்சள் நிலாக்கள்.
19. மனித உருவிலும் பசுமைச் சிற்பங்கள்.
20. மலர்கள் நனைந்தன பனியாலே.
21. நீர்த்துளியா தேன்துளியா..
22. தேன் உண்ணும் வண்டு.. மாமலரைக் கண்டு.
23. பெண்ணல்ல பெண்ணல்ல பிங்க்கிப் பூ.. :)
24. லால் பாக் . தும்பிக்கைகளா பூமியின் நம்பிக்கைகளா.
25. லால் பாக். அழகு ஆர்க்கிட்ஸ்
26. லால் பாக். பச்சை நிறமே பச்சை நிறமே .
27. லால் பாக் . என்னைக் கவர்ந்த சில இடங்கள்.
28. லால் பாக். பசுமை வளைவுகள்.
29. அழகழகாப் பூத்திருக்கு. !
30. மொக்கும் மலரும்.
31. இலை அலையும் ரோஜாப் படகும் பூ(மி)ப் பந்தும்.
32. மறைந்திருந்தே பார்க்கும் மர்மமென்ன. மூவர் அணி.
33. ஸ்ரீ முகுந்தம்மா தேவி கோவில்.
34. வெற்றிலை பூமாலையும் வெல்ல நெய்விளக்கும்.
35.. பனஸ்வாடியில் ஐந்து கோவில்கள்.
36. துறவின் வயலட். பான்ஸியும் பெட்டுனியாவும்.
37. மைசூரு சாமுண்டீஸ்வரி அம்மன் கோவில்
38. ஸ்ரீரங்கப்பட்டினா ஸ்ரீரங்கநாதஸ்வாமி கோயில்.









வல்லிசிம்ஹன்27 டிசம்பர், 2019 ’அன்று’ பிற்பகல் 12:06
பதிலளிநீக்குதேனம்மா, ஆஞ்சனேயர் தலைப்பில் தான் வியர்க்கிறார்.
உள்ளே காணோமே. அருமையான பகிர்வு. நன்றி கண்ணா. இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.
பதிலளி
Thenammai Lakshmanan27 டிசம்பர், 2019 ’அன்று’ பிற்பகல் 3:54
ஆமாம் வல்லிம்மா. நான் அனுமத் ஜெயந்திக்கு அங்கே இல்லை. அதுவுமில்லாமல் இது செவிவழி கேட்ட செய்தி. என் சகோதரி கூறினார். அதையே பதிவு செய்தேன்.
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!
பதிலளி
G.M Balasubramaniam27 டிசம்பர், 2019 ’அன்று’ பிற்பகல் 4:24
இங்குள்ள ஆஞ்சநேயர் கோவில்களில் வெற்றிலை மாலை சாத்தப்படுவது வழக்கம் ஒரு காலத்தில் பெங்க்ளூரே அல்லோலகல்லோப் பட்டது பிள்ளையார் பால் குடித்தது போல்
பதிலளி
வெங்கட் நாகராஜ்28 டிசம்பர், 2019 ’அன்று’ முற்பகல் 9:57
சிறப்பான கோவில் பற்றிய தகவல்களை உங்கள் பதிவு வழி அறிந்தேன். நன்றி.
பதிலளி
Thenammai Lakshmanan17 ஜனவரி, 2020 ’அன்று’ பிற்பகல் 11:37
தகவலுக்கு நன்றி பாலா சார்
நன்றி வெங்கட் சகோ
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!